செல்வப் பெருந்தகையின் ஊழலுக்கு திமுகவும் உடந்தையா? - அண்ணாமலை கேள்வி!
Jul 7, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செல்வப் பெருந்தகையின் ஊழலுக்கு திமுகவும் உடந்தையா? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Mar 28, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியுள்ள  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  செல்வப் பெருந்தகைக்கு திமுகவும் உடந்தையா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 12.08.2024 மற்றும் 19.08.2024 தேதிகளின் இடையே ஒரே வாரத்தில், ரூ. 65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, செக் புத்தகம் வழங்கிய அதே தினத்தில், கணக்கில் 65 லட்ச ரூபாய் வரவு வைத்து, பின்னர் இரண்டு செக்குகளில் கையொப்பம் வாங்கிவிட்டு பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை, கடன் தொகையில், ஒரு ரூபாய் கூடத் திருப்பிச் செலுத்தப்படவில்லை. கடன் பெற்ற தினத்திற்குப் பிறகு, அந்தக் கணக்கில் எந்தவித பணப் பரிமாற்றங்களும் இதுவரை நடைபெறவில்லை. கூட்டுறவு வங்கிகள், எந்தவிதப் பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா ரூ. 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கியது?  என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில் கடன் பெற்றவர்கள், தூய்மைப் பணியாளர்கள்தானா என்ற சந்தேகம் இருக்கிறது. மத்திய அரசின் NSFDC திட்டம் அல்லது NAMASTE திட்டம் மூலமாகக் கடன் பெற்றிருந்தால், உண்மையான பயனாளிகள்தானா என்பதை சரிபார்த்திருப்பார்கள். அதனைத் தவிர்க்கவே, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூன் 7 அன்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட Gengreen Logistics & Management Pvt. Ltd என்ற நிறுவனத்துக்கும், வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழக அரசோடு, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள ரூ.524 கோடிக்கான கழிவு நீரகற்றும் ஒப்பந்தப் பணிகளை, அவர்களுக்குப் பதிலாக Gengreen Logistics நிறுவனமே மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான வீரமணி ராதாகிருஷ்ணன் என்பவர்,  செல்வப்பெருந்தகை அவர்களின் சொந்த அண்ணன் மகன். இந்த நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்  செல்வப்பெருந்தகையின் அலுவலக முகவரி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வுக்கும், அவர்கள் முன்னேற்றத்திற்கும் கொண்டு வரப்பட்ட திட்டம், செல்வப்பெருந்தகையின் பினாமி நிறுவனத்திற்கு வாகனங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, திமுக அரசுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து, அவர்களுக்கான திட்டங்களை தங்கள் நலனுக்காக மடைமாற்றியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: annamalaiTamil Nadu BJP State Presidenttamilnadu congress presidentSelva Perundakaisanitation workers entrepreneurs.
ShareTweetSendShare
Previous Post

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies