பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக உறுப்பினர்கள், புதிதாகக் கட்டப்பட்ட நகர்மன்ற கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நகராட்சியில் குப்பைகள் அள்ளுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், பாதாளச் சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை நடத்த விடமாட்டோம் எனவும் திமுக உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று, அதிமுக உறுப்பினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அதிமுக நகர்மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார்.