தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவான நிலையில், வானுயர நின்ற அடுக்குமாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தன.
பல கட்டடங்கள் சேதமான நிலையில் அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தாய்லாந்து அவசரக்கால மீட்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு இருக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பாங்காக் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், தாய்லாந்து முழுவதும் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.