அந்நிய சக்தி ஊடுருவல் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ள CSIF வீரர்களுக்கு நாகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56-வது உதய தினத்தையொட்டி கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, வீரர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் வீரர்கள் நாகப்பட்டினம் வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்குப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மாலை அணிவித்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.