தென்காசியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டத்தில், நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி திமுக-வை சேர்ந்த உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது . மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின்போது 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்ட சில திமுக உறுப்பினர்கள், நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.