சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை, சொந்த வாகனத்தில் வரும் ரசிகர்கள் கதீட்ரல் சாலை மற்றும் RK சாலையைப் பயன்படுத்தி சேப்பாக்கத்திற்கு வருகை தருமாறு அறிவித்துள்ளது.