உழவர் நலன் மற்றும் காரீஃப் பருவ சாகுபடிக்காக 37 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 22 ஆயிரத்து 919 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கோஷி ஆற்றை, மெச்சி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு 6 ஆயிரத்து 282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.
உழவர் நலன் மற்றும் காரீஃப் பருவ சாகுபடிக்காக 37 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.