தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் எந்த மோசடியும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனுவைத் தள்ளுபடி செய்து, விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.