காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரவுடி வசூல்ராஜாவை, கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து செவிலிமேடு, பொய்யா குளம், நாகலத்து மேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.