தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணமென தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக பொதுக்குழுவில் பங்கேற்று பேசிய அவர், ஒரு குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா? என்றும், மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே என்றும் விமர்சித்தார்.
ஒரு குடும்பம் நன்றாக இருக்க அரசியலா? ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க அரசியலா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழக மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், நிச்சயமாக சந்திப்பேன் என்றும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை என்றும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணம் என்றும், ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள், தொண்டர்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்? என்றும் தெரிவித்தார்.