கோவை மாவட்டம் சூலூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில நபர் கைது செய்யப்பட்டார்.
கரையான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை வேலைக்குச் சென்ற இவர், மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனர்.