திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த நாடக கலைஞர் பரமசிவன், கடந்த 2012-ம் ஆண்டு 15 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பரமசிவனுக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது.