திருநெல்வேலியில் மதுபான ஊழல் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுபான ஊழல் செய்து ஆயிரம் கோடியை அமுக்கிய தியாகி யார்? என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர் கணேச ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அதிமுகவினர் திரண்ட நிலையில், கணேச ராஜா விசாரணைக்கு ஆஜரானார்.