உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமநவமி விழாவையொட்டி தங்கும் விடுதிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
அயோத்தி ராமர் கோயிலில் நாளை முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை ராம நவமி கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி அயோத்தியில் உள்ள தங்குமிடங்களில் ஏற்கனவே 90 சதவீத அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 சதவீத அறைகளை முன்பதிவு செய்யப் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.