இந்தோனேசியாவில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
அந்நாட்டின் பஞ்சீர் பந்துல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால், அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி, குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டுப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.