தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பாரம்பரிய முறைப்படி வேம்பம்பூ மற்றும் வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை படையலிட்டு மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.