கேரளாவிற்கு தமிழ்நாடு தாய்க்குலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சிதான் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பாடலாசிரியர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவிற்கு தமிழ்நாடு தாய்க்குலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் தனக்கு அது மகிழ்ச்சி தரும் என தெரிவித்தார்.