நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, அயன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனடிப்படையில், கரடியை பிடிக்க நெசவாளர் காலனி பகுதியில் உள்ள அக்னி சாஸ்தா கோயில் அருகே வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. கடந்த 20ஆம் தேதி முதல் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினரின் கூண்டில் அதிகாலையில் சிக்கியது.
சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.