ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சந்தைப்பேட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திச் சென்றன. அதை சாலையின் இரு புறங்களிலும் இருந்த மக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.