சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் வெங்கடேசன் என்பவர் கடந்த 4 மாதங்களாக அவருடைய நண்பர் சேதுபதி உடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீசவே, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருக்கவே, பின் பக்க கதவு வழியாக உள்ளே சென்றனர். அப்போது, தலையில் வெட்டு காயங்களுடன் வெங்கடேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.