எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்தி வரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதனால் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள டெஸ்லா காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.