கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாட்டுவண்டி வீரர்கள் கலந்து கொண்டனர். 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.