எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை தளர்த்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தங்களது கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் நான்கு நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.