ஈரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு நால் ரோடு பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு பகலாக மதுபான விற்பனை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
180 மில்லி லிட்டர் மது பாட்டில்கள் 100 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.