விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 9, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள். நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி கூலிகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.50 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு 2 கடந்த ஆண்டுகளாகவே உயர்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று, விசைத்தறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு, வாடகை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பதினைந்து மாதங்களாக, கூலி உயர்வு கோரி, பத்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூகமான முடிவு எட்டாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் விளைவாக, கடந்த பதிமூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ₹30 கோடி என சுமார் ரூ.390 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதிகளில், சுமார் 50,000 விசைத்தறிகள் செயலிழந்து போயுள்ளன. கூலி உயர்வு வழங்கப்படாவிட்டால், மேலும் விசைத்தறிகள் உற்பத்தியை இழந்துவிடும் என்று விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவும்படியும், அதன் மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படியும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Weaver who weaves for a wagetn bjptn bjp annamalaiதிருப்பூர்கோவைஅண்ணாமலை வலியுறுத்தல்
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது!

Next Post

வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் – ஹாஜி சையத் சல்மான்

Related News

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies