கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ருட்டியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், திமுக நிர்வாகி சீனு என்பவர் தனது வாகனத்துக்கு நிரப்பிய பெட்ரோலுக்கு 2-வது முறையாகப் பணம் தராமல் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரிடம் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர், நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி சீனு, அப்பெண் ஊழியரை ஆபாசமாக திட்டியதுடன் பலமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர் திமுக பிரமுகர் என்பதால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.