குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மர பொருட்கள் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காந்திதாம் பச்சாவ் நெடுஞ்சாலையில் உள்ள மர பொருட்கள் ஆலையில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவெனப் பரவி மர பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும், பாதுகாப்பு கருதி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.