வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 43 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 921 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 43 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆயிரத்து 921 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.