திருப்புவனம் பகுதியில் வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்படும் அரிவாள்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் மிகவும் புகழ்பெற்றது என்பதால் பலரும் அதனை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பாச்சேத்தி அரிவாளுக்குப் போட்டியாக மத்தியப்பிரதேசம் போபாலைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக திருப்பாச்சேத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டு விவசாய கருவிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் கண்முன்னே இரும்பை வெட்டி கத்தி தயாரித்து 300 ரூபாய்க்கு வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்கின்றனர்.
திருப்பாச்சேத்தியில் விற்கப்படும் அரிவாளின் விலையை விட வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்யும் அரிவாளின் விலை குறைந்து காணப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.