நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் கொடிபட்டம் விதி உலாவாக கொண்டுவரப்பட்டு கொடிமரத்தின் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.