முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை குறித்த பிரச்சனை தேவையின்றி எழுப்பப்படுவதாக, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி மறைந்தபோது அவரது சிந்தனைகளை அழிக்க அவுரங்கசீப் முயன்றதாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பதிலளித்துள்ள ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி, அவுரங்கசீப் இந்தியாவில் இறந்ததால், அவருக்கு இங்கேயே கல்லறை கட்டப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கை உள்ளவர்கள் அங்குச் செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்சல் கானின் கல்லறையை எழுப்பி சத்ரபதி சிவாஜி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளதாகவும், இது இந்தியாவின் தாராள மனப்பான்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னம் என்றும் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தார்.