நாமக்கல்லில் அரிசி குருணை வாங்கி சுமார் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
காதப்பள்ளியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவரான செந்தில்குமார் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இவர் தனது பண்ணை கோழிகளுக்கு தீவனமளிப்பதற்காக நாமக்கல்லைச் சேர்ந்த வியாபாரியான சசிகுமார் என்பவரிடம், சுமார் 17 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு அரிசி குருணையை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அரிசி குருணைக்கான தொகையை வழங்க மறுத்த செந்தில்குமார், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சசிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி செந்தில் குமாரை தேடி வருகின்றனர்.