சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவதாபுரத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த மழையில் சாலை அடித்துச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை வசதியில்லாததால், வீடுகளில் குழி வெட்டிக் கழிவுநீரை தேக்கிவைப்பதால் கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகி வருவதாகவும், 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீரை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
எனவே, தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.