ராஜஸ்தானின் பேவார் மாவட்டத்தில் உள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்ததில் மூவர் பலியாகினர்.
வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து நைட்ரஜன் வாயு கசிந்ததே விபரீதத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் வாயுவைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.