மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெ.பி. நட்டா பதிலளித்தார்.அப்போது நிதி பிரச்னையால் எய்ம்ஸ் பணிகள் தாமதமானது என்றும், தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுவதாகவும், மத்திய அரசு நிதி வழங்குவதில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என்று ஜெ.பி நட்டா தெரிவித்தார்.