கோவை மதுக்கரை நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன .இந்த நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த நூர்ஜகான் நாசர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.