தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுடன் தங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 22ஆம் தேதி நடந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தங்களிடம் வழங்கவுள்ளதாகவும், முக்கியமான பிரச்னையில் ஒன்றுபட்ட நிலைபாட்டை தெரிவிக்க நேரம் ஒதுக்கி தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.