சென்னை கொளத்தூரில் முதியவரை ராட்வைலர் நாய்க் கடிக்கும் அதிர்ச்சி சிசிடிவி வெளியாகியுள்ளது.
கொளத்தூர் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த முதியவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தனது ராட்வைலர் நாயை அந்த நபர் ஏவி விட்டதை அடுத்து, முதியவரை அந்த நாய் கடித்தது. இது தொடர்பாக முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் நாயின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனக்கு வழக்கறிஞர்களைத் தெரியும் எனக்கூறி நாயின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நாயின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.