யமுனை ஆற்றில் வெள்ளை நிற பனிப்படலம் போல் ரசாயன நுரை மிதந்து செல்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
வெள்ளை நிற பனிப்படலம் போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாகப் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.