வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருவதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மக்களவையில் வக்பு மசோதா தொடர்பாக பேசிய அவர், வக்பு வாரியம் ’துவாரகா’ மீது உரிமை கோருவதாக கூறினார். கிருஷ்ணர் வருவதற்கு முன்பே இஸ்லாம் வந்ததா? எனவும், அதை விட்டுக் கொடுக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ள நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு நன்மை அளிக்கும் எனக் குறிப்பிட்ட அனுராக் தாக்கூர், வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் சமரசம் செய்து கொள்வதாகவும் விமர்சித்தார். மேலும், வக்பு சட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸைச் சேர்ந்த சில தலைவர்கள், சொத்துகளை வசப்படுத்தியதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.