செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதென, பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதற்கு 7.6 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இந்த சேமிப்பு பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுகிறது. இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பொதுமக்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும், திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்…