டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிரான மனுவை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதமான எனக்கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 139ன் கீழ் தமிழக அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஏற்றுக்கொண்டுள்ளார்.