நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றப்பட்டது முக்கிய திருப்புமுனை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் பாதிப்பைச் சந்தித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவால், வெளிப்படைத்தன்மையை அதிகரித்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
வக்பு சட்டத்திருத்தத்தில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், மக்களின் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வழங்கிய அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.