திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டு இருங்களூரை சேர்ந்த ஜெகன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்துள்ளார். காதலை ஏற்க அந்த பெண் மறுக்கவே, தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை காரில் கடத்திச்சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் காரை மடக்கிப் பிடித்து ஜெகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட பெண்ணை பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.