கடந்த நிதியாண்டில் பயணிகளிடம் இருந்து அபராதமாக 22 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூல் செய்து சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
டிக்கெட் இல்லாமல் பயணித்தல், கூடுதல் எடை கொண்ட பொருட்களுடன் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில் நிலையங்களில் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் கடந்தாண்டில் மட்டும் 22 கோடியே 13 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 9 சதவீதம் அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.