மரிக்கொழுந்திற்கு புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நறுமணத்தைத் தரும் மரிக்கொழுந்து மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், இதன்மூலம் மரிக்கொழுந்துக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.