கோயில் நிலத்தை முறைகேடாகத் தனது பெயருக்குப் பட்டா பெற்றுள்ள காவேரிப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரி பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர் என்பவர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைத் தனது பெயருக்குப் பட்டா மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.