சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் மனைவியுடன் தேநீர் குடிக்கச் சென்றபோது அருகே இருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தியுள்ளார். அப்போது, தனது வீட்டின் முன்பு ஏன் காரை நிறுத்தினீர்கள் எனக்கூறி நடிகர் தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதி மகன் ஆத்திச்சூடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்ஷனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.