தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் தான் இல்லை எனவும், அனைவரும் சேர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வோம் என்றம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
அரசு மற்றும் தனிநபர் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்தாக அறிவிக்கும் வக்ஃப் சட்டப் பிரிவு 40 நீக்கப்பட்டுள்ளதோடு, இஸ்லாம் மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் வக்ஃப் சட்டத்தின் கிழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் அமைந்துள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழக பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றும் தமிழக மண்ணை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் டெல்லி சென்றால் ஒருநாள் தான் தங்கியிருப்பேன் என தெரிவித்தார்.
பாஜக-வில் மாநில தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை என்றும் அனைவரும் சேர்ந்து பாஜக மாநில தலைவர் தேர்வு செய்வோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் நிச்சயம் கைதுகள் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.