சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது.
சென்னையில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கோகுலம் சிட் பண்ட்ஸ் உரிமையாளரும், எம்புரான் திரைப்பட தயாரிப்பாளருமான கோபால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோபாலின் மகனிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், 11 மணி நேரத்திற்கு பின் சோதனை நிறைவுபெற்றது.